விராட் கோலிக்கு வித்தியாசமான கோணத்தில் வாழ்த்துக் கூறிய மனைவி.! - Seithipunal
Seithipunal


பிரபல கிரிக்கெட் வீரர் கோலி இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். இவர் ஐபிஎல்-இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் தலைவர். இவர் சர்வதேச சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கின்றார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் பணியாற்றி இருக்கின்றார். 

இவரை ரசிகர்கள் கிங் கோலி என்று அழைப்பார்கள். இவர் கடந்த 2013 முதல் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் காதலில் இருந்து வருகின்றார். இருவரும் காதலித்தபோது கிரிக்கெட் விளையாடும் இடங்களுக்கு காதலி அனுஷ்கா செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார். இப்படி இருவரும் வெளிப்படையாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 2017 இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். 

அதன் பின்னர், இவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இவரது சமீபத்திய மேட்சில் கோலி சுறுசுறுப்பாக விளையாடி அதிகப்படியான ரன்களை குவித்து வருவது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. 

இந்த நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் அனைவரும் அவரது அருமை, பெருமைகளை எடுத்துக் கோரி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய நிலையில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "கோலியின் அருமையான கோணங்கள்." என்று கூறி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anushka sharma wishes To kohli 2022 birthday


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->