பாகிஸ்தான் தான் மிகச் சிறந்த அணி - இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலக கோப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் உலக கோப்பை குறித்து அந்தந்த அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ளே கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ஹர்ஸ்தீப் சிங் சிங் பந்து வீசிய விதம் குறித்து பாராட்டியுள்ளார். 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் பந்து வீசுவது என்பது கனவு தான் ஆனால் அதில் ஹர்ஸ்தீப் சிங் தேறியுள்ளார்.

மேலும், அவர் நிறைய ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலம் முதிர்ச்சி அடைந்து காணப்படுகிறார். அவர் இன்னும் முன்னேறி செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் அதாவது ஜாகிர் கான் போல இவரும் ஒரு பெரிய பவுலராக வலம் வர வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்த டி20 உலக கோப்பையில் நல்ல வேகபந்து வீச்சாளர்கள் கொண்ட அணி எது என்றால் பாகிஸ்தான் அணி தான் என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் நல்ல ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். அதேபோல் இந்திய அணியிடம் நல்ல ஸ்பின் பவுலிங் உள்ளது. ஆனால், வேகப்பந்து வீச்சு என்றால் அது பாகிஸ்தான் அணிதான் என்று அணில் கும்ளே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anil kumle speech about Pakistan fast bowling


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->