"நா வந்துட்டேனு சொல்லு." பட்டை தீட்டிய வைரமாக ஐபிஎல்லில் களமிறங்கும் ஆல்ரவுண்டர்.!  - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஹார்டிக் பாண்டியா. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடருக்கு பின்னர் முதுகுவலி காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

லண்டன் சென்று சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா சில நாட்களுக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்கினார். தற்போது நடைபெற்று வருகின்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடற்தகுதி தேர்வில் பாண்டியா தோல்வி அடைந்தார். 

இந்நிலையில், தற்போது மீண்டும் உடற்தகுதி காண பயிற்சியினை செய்துவருகின்ற பாண்டியா பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெற்று வருகின்றார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வீரர்கள் மும்பையில் பயிற்சிக்கு வந்த போது அவர்களுடன் இணைந்து பாண்டியா பயிற்சி மேற்கொண்டார். 

மேலும் நியூசிலாந்து தொடருக்கு முன்பாக இந்திய ஏ அணிக்காக அவர் விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், மீண்டும் அவர் டியா உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில், தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் பாண்டியா விரைவில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஐ.பி.எல் தொடருக்கும் அவர் முழுதாக தயார் ஆகி விடுவார் என்றே தோன்றுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

all rounder return to ipl team


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal