பிசிசிஐயில் முடிவுக்கு வர இருக்கும் குழுவின் அதிகாரம்!   - Seithipunal
Seithipunal


உச்ச நீதிமன்றம் வினோத் ராய் தலைமையில் நிர்வாக குழுவை நியமித்து, லோதா கமிட்டியின் பரிந்துரையை பிசிசிஐ நிர்வாகத்தில் நடைமுறைபடுத்த உத்தரவிட்டது. அதாவது இந்த நிர்வாக குழுவானது பிசிசிஐ -யில் இருக்கும் சீர்கேட்டை களைந்து தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். 

பிசிசிஐ-யில் எல்லா முக்கிய முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழுவு தான் கொண்டிருந்தது. 
இதையடுத்து பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் வருகின்ற அக்டோபர் 23-ம் தேதிக்குள் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே தேர்தலை மாநில சங்கங்கள் நடத்தி முடித்தன.

பிசிசிஐ தேர்தல் அக்டோபர் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து வினோத் ராய் " தேர்தல் முடிந்ததும் நிர்வாக குழு ராஜினாமா செய்யப்படும்" என்று தெரிவித்தார்.  இக்குழு கிட்டதட்ட 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்த நிர்வாக குழுவின் செயல்பாடு முடிவுக்கு வர இருக்கிறது. 

நிர்வாக குழுவினால் பல மாற்றங்கள் நடைபெற்றாலும், சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன் போன்ற இந்திய அணியின் ஜாம்பவான்கள் சில விரும்பத்தகாத அனுபவங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

after bcci election dropped coa committee


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->