2023 உலகக் கோப்பை.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம்?.. காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ள லீக் போட்டிக்கான தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்ல ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இதில் தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் அக்டோபர் 8ம் தேதி சென்னையில் விளையாடுகிறது.

இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு காரணம் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை வேறு தேதிக்கு மாற்ற பிசிசிஐக்கு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கோரிக்கையை ஏற்று இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டியின் தேதியை பிசிசிஐ மாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 World Cup India vs Pakistan shedule change


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->