திருப்பதியில் சிரமம் இல்லாமல் வி.ஐ.பி தரிசனம் செய்ய வேண்டுமா? இதை எழுதினால் மட்டும் போதும்.! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் சிரமம் இல்லாமல் வி.ஐ.பி தரிசனம் செய்ய வேண்டுமா? இதை எழுதினால் மட்டும் போதும்.!

புரட்டாசி மாதம் ஆரம்பமானது முதல் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்றும் முன்தினம் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை அன்று பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், சர்வ தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது. 

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தில் குடும்பத்தோடு விஜபி தரிசனத்தை மேற்கொள்ள விரும்புவோர் ஒரு கோடி ‘கோவிந்தா’ நமாத்தை எழுதி வந்தால் குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் தலைவர் கருணாகர ரெட்டி, 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டிருந்தார். அப்போது, 25 வயதுக்குட்பட்டவர்கள் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதுவதைப் போன்று "கோவிந்தா" நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வந்தால் அவர்கள் குடும்பத்தினருடன் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அப்படி, ஒரு கோடி முறை எழுதாமல், 10 லட்சத்து 1,116 முறை கோவிந்தா நாமத்தை எழுதி வருபவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு மட்டும் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

write one crore govinda naman for VIP dharisanam in tirpathi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->