சகல தோஷங்களையும் போக்கும் வைகாசி தேய்பிறை பிரதோஷம்.! - Seithipunal
Seithipunal


வைகாசி தேய்பிறை பிரதோஷம்.!

விசேஷங்கள் நிறைந்த வைகாசி மாதத்தில் வருகிற அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்ளவும் ஏற்றதாக இருக்கிறது.

மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் சுபகாரியங்கள் விரும்பி செய்யப்படுகின்ற மாதமான வைகாசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தும் கிடைக்கப் பெற்று இறுதியில் சிவனில் கலக்கின்ற பாக்கியமும் பெறுகிறார்கள்.

அந்த வகையில் வைகாசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க...

வைகாசி தேய்பிறை பிரதோஷம் :

வாழ்வில் ஏற்படும் துயரங்கள் தீர சிவபெருமானை பிரதோஷ காலங்களில் வழிபடுவது சிறந்தது. பிரதோஷ தினம் என்பது சிவபெருமானையும், அவரின் வாகனமான நந்தி பகவானையும் வணங்க மிக உன்னத நாளாக கருதப்படுகிறது.

வைகாசி மாத தேய்பிறை பிரதோஷத்தன்று சிவபெருமானை நினைத்து அதிகாலை 6 மணிக்கு முன்பாகவே எழுந்து தலைக்கு குளித்து விட வேண்டும்.

தலைக்கு குளிக்கும் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு, 'ஓம்" என்ற மந்திரத்தை அந்த தண்ணீரில் வலது கை ஆள்காட்டி விரலால் எழுதி, கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார நினைத்து கொண்டு அந்த தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.

பூஜை அறைக்கு வந்து 'ஓம் நமசிவாய" மந்திரத்தை சொல்லி தீபம் ஏற்றி, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு விரதத்தை தொடங்க வேண்டும்.

அன்று சிவனை வணங்கி உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம்.

முடிந்தவர்கள் அன்றைய தினம் பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானின் ஆலயத்தில் அமர்ந்து கடன் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்யவும். உங்களால் முடிந்தால் மாதுளை பழங்களை உதிர்த்து உள்ளே இருக்கும் மாதுளை முத்துக்களை, கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு மாதுளை பழத்தை, சிவபெருமானை நினைத்து தானம் கொடுப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

பிரதோஷ பலன்கள் :

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும்.

போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக உள்ள அனைத்தையும் உடைத்து அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல வழிவகை உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaikasi theypirai pradhosham special in tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->