8 மணி நேரம் மூடப்படும் திருப்பதி கோவில் நடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செகின்றனர். கடந்த மாதம் புரட்டாசி என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இருப்பினும், தற்போது பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், வருகிற ஞாயிற்று கிழமை சந்திர கிரகணம் வர இருப்பதால் திருப்பதி கோயில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 29-ம் தேதி சந்திர கிரகணம் என்பதால், நாளை மறுநாள் அதாவது சனிக்கிழமை இரவு 7.05 மணி முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படும்.

அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, சுப்ரபாத சேவைக்கு பிறகு காலை 5.15 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் ஏழுமலையான் கோயில் நடை சுமார் 8 மணி நேரம் வரை சாத்தப்படும்.

அதுமட்டுமல்லாமல், நாளை சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படும். திருமலையில் உள்ள அனைத்து தலங்களிலும் அன்ன பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தப்படும். ஆகவே, இதனை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்களது யாத்திரையை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupati temple gate close coming 29 for lunar


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->