திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி திருவிழா..!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிபகவான் நிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது 12 ராசிகளிலும் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்த கூடும். இதனால் பக்தர்கள் சனி பெயர்ச்சி அன்று திருநள்ளாரில் அமைந்துள்ள சனிபகவான் ஸ்தலத்திற்கு சென்று வழிபடுவது வழக்கம். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சனி பெயர்ச்சியின் பொழுது திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் சனி பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் வரும் தமிழ் புத்தாண்டான சோபகிருது ஆண்டு மார்கழி மாதத்தில் (டிசம்பர் 2023) சனி பெயர்ச்சி நடைபெற உள்ளது.

தற்பொழுது மகர ராசியில் இருக்கும் சனீஸ்வர பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசிக்கு இடம்பெயர உள்ளார். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம் படி சனிப்பெயர்ச்சி நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஸ்தலத்தில் சனி பெயர்ச்சி திருவிழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை சோபகிருது வருடத்திற்கான வாக்கிய பஞ்சாங்கம் வெளியிடப்பட்டவுடன் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunallaru Sanipeyarchi festival press release issued by the temple admin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->