விவேகமாக செயல்பட்டு, காரியத்தை சாதிக்கும் ராசிக்கு அதிசார சனிப்பெயர்ச்சி பலன்கள்.!  - Seithipunal
Seithipunal


மேஷ ராசி:

மேஷ ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் அதிசார பெயர்ச்சியின் காரணமாக பதினொன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

சனி பார்வை படும் ராசிகள் :

சனி தான் நின்ற ராசியிலிருந்து 

மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும்,

ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும்,

பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

பலன்கள் :

செயல்பாடுகளில் விவேகமும், பொறுமையும் வெளிப்படும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகள் குறையும். தோற்றப்பொலிவு வெளிப்படும். உடனிருப்பவர்கள் பற்றி புரிதல் மேம்படும்.

பலதரப்பட்ட சிந்தனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். கனவு சார்ந்த இன்னல்கள் குறையும். நண்பர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். 

நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். கணவன்-மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். பழைய வீடுகளை பழுதுபார்ப்பது தொடர்பான முயற்சிகள் கைகூடும். 

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி லாபமும், அபிவிருத்திக்கான சூழ்நிலையும் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான விஷயங்கள் கைகூடும். மனதில் இனம் புரியாத புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் உண்டாகும்.

வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் மற்றும் வேலை நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயம் தொடர்பான பணிகளில் உடல் உழைப்பு அதிகரிக்கும். 

எளிமையான சில பணிகளை கூட கடுமையாக செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். இலக்கியம் மற்றும் கற்பனை சார்ந்த தொழில்களில் வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sani Peyarchi palankal 2022 for mesha rasi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->