சபரிமலையில் நடை திறப்பு - அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்.!
sabarimalai temple gate open from today for aippasi month poojai
சபரிமலையில் நடை திறப்பு - அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்.!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
இந்த நிலையில், நாளை முதல் 5 நாட்கள் வரை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். இதையடுத்து வருகிற 22-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசின் சிறப்பு பேருந்துகள் சபரிமலைக்கு இயக்கப்படுகின்றன.
இதுமட்டுமல்லாமல், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முன்பதிவிற்கான தற்காலிக மையம் நிலக்கல் பகுதியில் இன்று முதல் செயல்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
English Summary
sabarimalai temple gate open from today for aippasi month poojai