லட்சுமி கடாட்சம் பெருக செய்யும்.. குபேர விளக்கு, குத்து விளக்கு.! - Seithipunal
Seithipunal


மகத்தான பலன்களை வாரி வழங்கும் விளக்கு:

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்க செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச்சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச்சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.

தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி நல்ல பலன்களை தருகின்றன. நாம் வாழும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

விளக்கேற்றும் நேரம் :

விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்கு சற்று முன்னதாக பிரம்ம முகூர்த்தம் (4.30am முதல் 6.00am) என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.

அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்கு சற்று முன்னதாக, பிரதோஷ காலம் மாலையில் (4.30pm முதல் 6.00pm) என்கிற உன்னதமான காலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் செல்வம் பெருகும், சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும், புத்திர பாக்கியம் உண்டாகும், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் எல்லாவிதமான பாக்கியங்களையும் பெறலாம்.

விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன்கள் :

புனிதமான விளக்கை ஏற்றி வழிபடும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உடனடியாக கலந்து இறைவனின் அனுக்கிரகத்தை பெற்று தரும் ஆற்றல் மிக்கதாகும்.

விளக்கை ஏற்றி வழிபடும் இடத்தில் தெய்வீக ஆற்றல் அதிகரிக்கும்.

அனைத்து தோஷங்களும் விலகும்.

கண்திருஷ்டி மறையும்.

பிரார்த்தனை அனைத்தும் நிறைவேறும்.

மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lakhsmi kadatcham kubera vilakku kuthuvilakku


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->