நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் எல்லாம் ஏன் வைக்கிறோம் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


கோவில்களில் சென்றால் விபூதி, குங்குமம் சாமிக்கு படைத்து பூசாரிகள் நமக்கு நெற்றியில் வைத்துக் கொள்ள கொடுப்பார்கள். ஏன் விபூதி, குங்குமம் நெற்றியில் வைக்கிறோம் என்று தெரியுமா?அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்:

என்னதான் ஆடை, அணிகலன்கள் போட்டு பெண்கள் தங்களை அலங்காரம் பண்ணிக்கொண்டாலும் ஒரு சின்ன நெற்றிப்போட்டு இல்லையென்றால் அந்த அலங்காரம் முழுமைப் பெறாது.எதற்காக பெண்கள் நெற்றியின் மத்தியில் பொட்டு வைக்கிறார்கள் அழகுக்காக மட்டும் அல்ல. நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகத்தான் செல்கின்றன. அதனால் நெற்றிப் பகுதியில் எப்போதும் அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றிற்கு நெருப்பு சக்தி உள்ளது.

ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் முதலில் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறார்கள்.வாகனங்களின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர்தான். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்கின்றன.

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் கெட்ட நீரை நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டால் விபூதி அந்த கெட்டநீரை உறிஞ்சி வெளியேற்றிவிடும். இதற்காக நெற்றியில் விபூதி கொள்வதற்கான நோக்கமாகும்.

நெற்றிப்பகுதியில் அதிகளவில் சூடு ஏறுவதால் கிருமித் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினியாகும். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வைத்து விட்டனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே பயன்படுத்துகின்றனர்.

நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலை செய்யச் சொன்னாலும் காரணம் இல்லாமல் செய்திருக்க மாட்டார்கள். சம்பிரதாயங்கள் என்ற பெயரில் அனைவரும் மருத்துவ முறைகளை அழகாகவும், மறைமுகமாகவும் கடை பிடித்து வந்துள்ளனர்.

ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும். அதில் தடவ படும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்துவதுடன் சூரிய ஒளியை நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுக்கிறது. கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு பெரிதும் ஆபத்தானது ஆகும்.எனவே, குங்குமம், சந்தனம், விபூதியின் பயன்களை அறிந்து தினமும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் நெற்றியில் இட்டுக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

good tips to tamil medicine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->