திருப்பதியில் நாளை 7 மணி நேரத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது - தேவஸ்தானம் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு, நாளை ஏழு மணி நேரத்திற்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு நாளை திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

இதற்காக அதிகாலை 4.30 மணி முதல் 11.30 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இந்த 7 மணி நேரத்திற்கு பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

காலை 11.30 மணிக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees will not be allowed in Tirupati for 7 hours tomorrow Devasthanam notification


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->