ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை மகத்துவமானது ஏன் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


ஆவணி மாததில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் மகத்துவம் நிறைந்ததாக காணப்படுவதற்கு காரணம் என்ன தெரியுமா?

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தை தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக பெரியோர்கள் சொல்வார்கள்.

 அர்ஜுனனுக்கு ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. 'ஞாயிறு என்றாலே சூரியன்".

ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவை புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரிய நமஸ்கார பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமானது.

கிரக தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும், செல்வ வளம் அதிகரிக்கவும், பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கவும் இந்த ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கலாம். ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பது ஐதீகம்.

ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாய பணிகளுக்கு செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் விரதத்தை அனுஷ்டித்து வந்தனர்.

இதன் காரணமாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் மேலும் நன்மை உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avani Month ngayiru special 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->