இன்று... யாருக்கு லாபம்?... யாருக்கு கீர்த்தி?... யாருக்கு மேன்மை?... வாங்க பார்க்கலாம்...!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

உத்தியோகஸ்தர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். வீட்டில் பொருட்சேர்க்கை உண்டாகும். தொழில் முனைவோருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். இணையதளம் சம்பந்தமான பணியில் நல்ல இலாபம் கிடைக்கும். 

ரிஷபம்:

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். தலைமைப் பதவியில் உள்ள அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். கால்நடைகளின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும்.

மிதுனம்:

புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். குடும்ப நபர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

கடகம்:

விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். ஆவணங்களை கையாளும் போது நிதானம் வேண்டும். வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்படும். 

சிம்மம்:

செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். 

கன்னி:

செய்யும் பணியில் சற்று கவனத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகளில் காலதாமதம் ஏற்படும்.

துலாம்:

உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியான தடைபட்ட செயலை இனிதே செய்து முடிப்பீர்கள்.

விருச்சகம்:

தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வேலையாட்களிடம்  ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி இன்பம் உண்டாகும்.

தனுசு:

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைகூடும். எண்ணங்கள் சீராகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். புதிய வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும்.

மகரம்:

மனதில் ஒருவிதமான பய உணர்வு உண்டாகும். கூட்டாளிகளிடம் அமைதி போக்கை கடைபிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். பெரியோர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை அளிக்கும்.

கும்பம்:

பொதுச் செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் ஏற்படும். சாஸ்திரம் பற்றிய ஞானம் மேம்படும். நண்பர்களுடன் கேளிக்கைகளில்  ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

மீனம்:

போட்டிகளில் பங்கேற்று பாராட்டப்படுவீர்கள்.  புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். வேள்விகள் சம்பந்தமான பணியில் ஈடுபடுவீர்கள். நீர் சம்பந்தப்பட்ட பணிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apr 04 rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->