பாசமானவர்களுக்கு ஒன்றென்றால் துடித்துப்போகும் ராசிக்கு அதிசார சனிப்பெயர்ச்சி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மீன ராசிக்கு அதிசார சனிப்பெயர்ச்சி பலன்கள்: 

மீன ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் அதிசார பெயர்ச்சியின் காரணமாக பனிரெண்டாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். 

சனி பார்வை படும் ராசிகள் :

சனி தான் நின்ற ராசியிலிருந்து,

மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான குடும்ப ஸ்தானத்தையும்,

ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான சத்ரு ஸ்தானத்தையும்,

பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

பலன்கள் :

தனம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். வியாபாரம் நிமிர்த்தமான விஷயங்களில் கவனம் வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. அன்பும், அமைதியும் கலந்த பேச்சுக்கள் உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் நபர்களின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது.

உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பணிபுரியும் இடத்தில் ஆர்வமின்மையும், சில நேரங்களில் மரியாதை குறைவும் நேரிடலாம். வாகன பயணங்களில் மிதவேகம் மிக நன்று.

எதிர்பாராத சில தகவல்களின் மூலம் விரயங்கள் ஏற்படும். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். உழைப்புக்கான ஊதியம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும்.

வீடு மாற்றம் மற்றும் தொழில் சார்ந்த துறைகளில் மாற்றம் செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். தடைபட்டு போன வெளியூர் உத்தியோக வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தனம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதத்திற்கு பின்பு கிடைக்கும்.

சகோதரர், சகோதரி வகையில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் ஏற்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adhisara sanipeyarchi palankal for meenarasi 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->