கூட்டத்தை கூட்டுவதில் குதூகலம் அடையும் ராசிக்காரர்களுக்கு அதிசார சனிப்பெயர்ச்சி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


அதிசார சனிப்பெயர்ச்சி பலன்கள்:

கும்ப ராசி:

கும்ப ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் அதிசார பெயர்ச்சியின் காரணமாக ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். 

சனி பார்வை படும் ராசிகள் :

சனி தான் நின்ற ராசியிலிருந்து,

மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான சகோதர ஸ்தானத்தையும்,

ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான களத்திர ஸ்தானத்தையும்,

பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான தொழில் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

பலன்கள் :

செய்கின்ற முயற்சிகளில் உழைப்பும், பொறுப்புகளும் அதிகரிக்கும். புதிய பயணங்களின் மூலம் அனுபவமும், புதுவிதமான கண்ணோட்டங்களும் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். 

சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் காணப்படும். நெருக்கமான உறவுகளிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் காணப்படும். இழுபறியாக இருந்துவந்த சொத்து விற்பனை தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அரசு தொடர்பான சில உதவிகள் மறைமுகமாக கிடைக்கப் பெறுவீர்கள். பலதரப்பட்ட அனுபவங்களின் மூலம் மனதளவில் பக்குவம் உண்டாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். 

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் மறைமுகமாக கிடைக்கப் பெறுவீர்கள்.

சுய தொழில் நிமிர்த்தமான விஷயங்களில் உழைப்பும், அரசு சார்ந்த உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் மற்றும் தடைகளுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

கடன் சார்ந்த தொல்லைகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த ஆர்வம் குறைந்து காணப்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adhisara sanipeyarchi palankal for kumba rasi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->