ஜிம்பாப்வே அணி வெற்றியால் குத்தாட்டம் போட்ட ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சு நேர்த்தியால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி முதல் 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 8 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தான் அணி ஒரு ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. யாருமே எதிர்பார்காத நிலையில் ஜிம்பாப்பே அணி அசத்தலான ஒரு வெற்றியை பெற்றுள்ளது.

இதனை நேரலையில் தொலைக்காட்சியில் கண்ட ஜிம்பாப்வே நாட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஜிம்பாவே அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பாட்டு பாடி குத்தாட்டம் போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zimbabwe cricket fans celebrating video viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->