என் பேண்டுக்குள்ள ஏன் பார்க்கிறீங்க? ட்விட்டரில் பங்கம் செய்த உதயநிதி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் சனாதான தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

சனாதன தர்மம் டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா ஒன்று ஒழிக்க வேண்டும் என பேசியதை இதற்கு காரணம். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று கொசுவத்தி சுருள் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்திற்கு இணையதள வாசிகளும் திமுக ஆதரவாளர்களும் பல்வேறு உள்ள அர்த்தங்களை கற்பித்து வருகின்றனர். ஆனால் ஒரு தரப்பினர் இரண்டு நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் சென்னையில் ஒரு சிறுவன் உயிரிழந்ததை மேற்கோள் காட்டி டெங்கு காய்ச்சலுக்கு காரணம் கொசு என்பதால் தான் கொசுவத்தி சுருள் புகைப்படத்தை பதிவிட்டுள்ளீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் உதயநிதியின் பதிவில் ஒருவர் "உங்கள் பேண்ட்டின் பின்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை ஏன் புகைப்படம் போட்டீர்கள்? நீங்கள் வாயைத் திறக்கும்போது அது வித்தியாசமாகத் தெரிகிறது" என உதயநிதி ஸ்டாலினை கலாய்த்தார்.

அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "என் கால்சட்டைக்குள் என்ன நடக்கிறது என்று ஏன் பார்க்கிறீர்கள்?😳 நல்ல நடத்தை இல்லை" என பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanithi response to Netizen criticism


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->