எம்.ஜி.ஆர் பிறந்தநாளில், ட்விட்டரில் சைலன்டாக பலே வேலை பார்த்த விஜய் ரசிகர்கள்..!! - Seithipunal
Seithipunal


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.

இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்.

சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

1960ஆம் ஆண்டு இவர் 'பத்மஸ்ரீ விருதுக்காகத்" தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் பாரத ரத்னா விருது, அண்ணா விருது, வெள்ளியானை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார். 

இவரது பிறந்த நாள் விழா இன்றளவும் வெகு விமர்சையாக அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #அன்று_MGR_இன்று_VIJAY என்ற ஹேஷ்டேக்குகளை பதிவு செய்து பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். 

இது தொடர்பான பதிவுகளில் அன்றைய காலத்தில் எம்.ஜி.ஆர் நிஜத்தில் செய்ததையும், இன்று பிரபல நடிகருள் ஒருவரான விஜய் மக்களுக்கு உதவி செய்த புகைப்படத்தை பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர். மேலும், தற்போது வரை மொத்தமாக ட்விட்டர் பக்கத்தில் சுமார் 48 ஆயிரத்திற்கும் அதிகமான ட்விட்களை பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in twitter vijay fans trend about mgr is next vijay


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->