இயற்கையின் எழிலுடன் மேகங்களுக்கு மத்தியில் கொண்டாட்ட பயணம்.. கண்ணை கொள்ளைகொள்ளும் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் ஏதேனும் ஒரு விஷயம் ட்ரெண்டிங் ஆவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், நடிகர்கள், விளையாட்டு, அரசியல் பிரபலங்கள் மற்றும் காமெடி நடிகர்களின் நகைச்சுவையான விஷயங்கள் என்று எந்த நேரமும் பரபரப்புடன் காணப்படும். 

இதனை போன்று அவ்வப்போது மக்களுக்கு ஏற்படும் பிரச்சினையை வெளிப்படுத்தும் விதமாகவும், சில பிரச்சினைகளுக்கு எதிராகவும் இருக்கும். ட்விட்டர் பக்கத்தை பொறுத்தவரையில் ஒரு தகவலை நாம் தெரிவித்து விட்டோம் என்றால், அது இன்னொருவருக்கு தெரிந்த பின்னர் சில நேரம் எதிர்பாராத விதமாக வைரலாவது உண்டு. 

இதனால் சிலர் மக்கள் மத்தியில் பிரபலமாவதும், சிலர் தவறான தகவல்களை தெரிவித்து மாட்டிக்கொள்வது நடந்து வருகிறது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பெரிய பிரச்சனையாக இருந்து வருவது போலி கணக்குகளின் செய்கைகள் மிக முக்கியமான ஒன்றாகும். ஒன்றும் இல்லாத பிரச்சனையை ஊதி பெரிதாக்குவதும், அப்பாவி நபர்களை மாட்டவைக்கும் விதமாகவும் சில நிகழ்வுகள் அமையும்.

இந்த இணையதளத்தின் உதவியால், இதனை பலபுதிய நல் விஷயங்களை அறிந்து கொள்ள உபயோகம் செய்யும் நபர்களை பொறுத்த வரையில், பல இயற்கையின் விந்தை மற்றும் செல்ல முடியாத இடங்களுக்கு செல்லும் விடீயோக்களை தேடி கண்டு கழித்து, அந்த விஷயம் தொடர்பாக புரிந்துகொண்டும் வருகின்றனர். இது பலருக்கு பல நன்மைகளை செய்துள்ளது. 

அந்த வகையில், தற்போது இணையத்தில் வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக போக்குவரத்தில் விலை அதிகமான மற்றும் அனைவரும் ஒருநாளாவது இதில் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்ட போக்குவரத்தில் விமான போக்குவரத்தும் ஒன்றாக உள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் போது, வானத்தில் விமான கூட்டத்திற்கு மத்தியில் பயணம் செய்யும் போது அழகான காட்சிகளை காணும் போது மனதிற்கு இனம்புரியாத மகிழ்ச்சியானது ஏற்படுகிறது. 

இப்போது இணையத்தில் வைரலாகி வரும் காட்சிகளில் விமானத்தில் பயணம் செய்யும் நபர் மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் பயணம் செய்யும் வீடியோ காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள குயுன்சிலாந்து தீவில் இந்த வீடியோ காட்சியானது மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் படமாக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in social media video trend about flight traveling with clouds in Queensland


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->