ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin ஹேஷ்டாக்.!! - Seithipunal
Seithipunal


ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin ஹேஷ்டாக்.!!

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்காக பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரில் நாளை மறுநாள் எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பீகாருக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேம்நாத் சோரன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. ஆனால் இதனை தடுக்காமல் பீகார் மாநில அரசு, தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து வேடிக்கை பார்க்கிறது என இரண்டு வீடியோகளை ஆதாரமாக காட்டி பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தமிழ்நாடு வந்துவிட்டு சென்ற மறுநாளே இந்த விவகாரம் பீகார் சட்டமன்றத்தில் எதிரொலித்தது. 

இந்த நிலையில், தற்போது பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில், பீகாரைச் சேர்ந்த பாஜகவினர் #GoBackStalin என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gobackstalin hastag trending on twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->