எதே.. "Bride Of Tamilnadu" மு.க ஸ்டாலினா? அர்த்தம் தெரியுமா? பங்கம் செய்த நெட்டிசன்கள்.!!
DMK youth wing poster mkStalin as bride of Tamilnadu
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினர். அந்த வகையில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் 576 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்காக சோழிங்கநல்லூர் பகுதியில் 197வது வட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த போஸ்டரில் மார்ச் 1 பிறந்தநாள் காணும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி இளைஞரணி சார்பாக 5076 பேருக்கு அன்னதானம் நிகழ்ச்சி என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில இடம் பெற்றிருந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினின் புகைப்படத்திற்கு பின்னால் "Bride Of Tamilnadu" என பிழையுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது Bride என்றால் தமிழில் மணப்பெண் என்று அர்த்தம். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தமிழ்நாட்டின் மணப்பெண் என திமுகவினர் ஊட்டிய போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இணையதள வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
English Summary
DMK youth wing poster mkStalin as bride of Tamilnadu