உறவிற்கு தடை போட்ட மனைவி.! காதல் கயவனின் கொடூர வேலையும், செய்த லீலையும்.!
murder in chennai trisoolam
தகாத உறவிற்கு தடையாக இருந்ததன் காரணமாக, திருமணமான ஒரே வாரத்தில் மனைவியை காதல் கணவனே கொன்று போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த அபின்ராஜ் என்பவர் மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த மனிஷா என்ற பெண்ணை 5 வருடமாக காதலித்துள்ளார். இவர் திருமணம் செய்து கொள்வதாக மனிஷாவை அழைத்துச்சென்று தனது சொந்தக்காரர் வீட்டில் தங்க வைத்துள்ளார். காதலனை நம்பி வந்ததால் மீண்டும் வீட்டுக்கு போக முடியாமல் மனிஷா தவித்துள்ளார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் போது நிறைய சண்டைகள், சச்சரவுகள், தகராறுகள் வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு மனிஷா கர்ப்பமாகியுள்ளார். இதன் காரணமாக அந்த உறவினரின் வீட்டில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். ஆனாலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.
மனிஷாவின் வயிற்றில் அபின் ராஜ் வேகமாக குத்தியதில் கர்ப்பம் கலைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் சில நாட்களுக்கு முன்பு பெசன்நகரில் பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் முடிந்து இரு நாட்கள் கழித்து மனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என மனிஷாவின் தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, மனிஷாவின் செல்போனை வாங்கி பார்த்த பொழுது அதில் ஒரு ஆடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த ஆடியோவில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணிடம் மனிஷா தாலி பிச்சை கேட்டு அழுதது கர்ப்பம் கலைந்தது என பல்வேறு விஷயங்களை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தன.ர் தனது மகளை கொலை செய்திருக்கக் கூடும் என்று நினைத்து பெற்றோர் பல்லாவரம் காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
அதன் பின்னர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற உடன் 50 பேராதரவுடன் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று அவர் மனிஷாவின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என புகார் அளித்ததன் காரணமாக அபின்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
murder in chennai trisoolam