ஆபாச படம் பார்க்க சொல்லி தொல்லை செய்த மனைவி.. படத்தில் இருப்பது மனைவி தான் அதிர்ச்சியில் கணவன்.!! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவை சேர்ந்த 32 வயது பெண் மருத்துவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு முன்பு பெண் மருத்துவர் ஒருவரை காதலித்ததாகவும் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தனது கணவரிடம் கூறி திருமணம் செய்து கொண்டுள்ளார். 

திருமணத்திற்கு பின்பு பெண் மருத்துவர் நிறைய ஆபாச படங்கள் பார்த்து உள்ளார். மேலும் அவரது கணவரையும் ஆபாசப்படம் பார்க்க சொல்லி தொந்தரவு செய்துள்ளார். மேலும் அதில் வருவது போல் என்னிடம் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கூறி தொந்தரவு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் அந்த படங்களை பார்த்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் இணையத்தில் ஆபாச படங்கள் பார்த்த போது அதிலிருந்து தன் மனைவி தான் என்பதை தெரிந்து கொண்ட கணவன், இதுபற்றி மனைவியிடம் கேட்டு உள்ளார். இதற்கு திருமணத்திற்கு முன் நான் பலருடன் தொடர்பு இருந்தேன் இந்த வீடியோ இப்படி இணையத்தில் வெளியானது என்று தெரியாது என கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான கணவர், பெண் மருத்துவரை விட்டு விட்டு சென்றுள்ளார். அதன் பின்பு பெண் மருத்துவர் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பெங்களூர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குடும்ப நல ஆலோசகர் மையத்தை நாடினார். அங்கு அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரது கணவர் விவாகரத்து வேண்டும் என கேட்க பெண் மருத்துவர், கடந்த காலத்தை மறந்து விடலாம் என கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband watch wife porn video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->