திருமணத்துக்கு மறுத்த காதலன்!! காதலனை துடிதுடிக்க வைத்த காதலியின் கொடூர செயல்!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள விகாஸ்பூரி என்ற இடத்தில் இளம் பெண் மற்றும் ஆண் காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது . இதனை அடுத்து விரைந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த 24 வயதான இளைஞரை போலீசார் நடத்திய விசாரணையில், தனது காதலி திடீரென தன் மீது ஆசிட் வீசிவிட்டதாக கூறினார். மேலும் தொடர்ந்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகிது.

பின்னர், 19 வயதான  இளைஞரின் காதலியிடம் விசாரிக்கையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவரிடம் போலீஸ் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் கூறியது கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர், இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்தப் பெண், காதலனிடம் வற்புறுத்தி வந்துள்ளார் திருமணத்தை தவிர்க்க அந்த இளைஞர் பல சாக்குபோக்குகளை கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் காதலை முறித்துக்கொள்ளும் மனநிலைக்கு காதலன் வந்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண் கடும் விரக்தியடைந்த அந்த பெண் வீட்டின் தரையை துடைக்கும் ஆசிட்டை ஒரு பாட்டிலில் அடைத்துக்கொண்டு நேற்று காதலனை விகாஸ்பூரி பகுதிக்கு வர வழைத்துள்ளார்.

விகாஸ்பூரி பகுதிக்கு காதலியை பார்க்க தலையில் ஹெல்மெட் உடன் காதலன் வந்துள்ளார், ஹெல்மெட் உடன் காதலன் வந்ததால் தனது திட்டம் நிறைவேறாமல் போய் விடுமோ என நினைத்த அந்த பெண், ஹெல்மெட்டை கழற்றமாறு காதலனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ஹெல்மெட்டை காதலன் கழற்றிய மறுகணமே பாட்டிலில் வைத்திருந்த ஆசிட்டை காதலனின் முகத்தில் ஊற்றியுள்ளார். ஆசிட் வீச்சில் அந்த இளைஞனுக்கு முகம், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

காதலன் மீது ஆசிட் வீசியாதல் போலீசாரிடம் பிடிபட்டுவிடுவோமோ என்ற அந்த பெண் பயத்தில் தனது உடலிலும் சிறிதளவு ஆசிட்டை ஊற்றி, அங்கேயே இருந்துள்ளார் பின்னர் அந்த பெண்ணை கைது செய்த போலீஸ், தற்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi love issue


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal