திருமண ஆசை காட்டி மகளை ஏமாற்றிய கயவன்.! ஆத்திரத்தில் தாயார் செய்த காரியம்.!  - Seithipunal
Seithipunal


10ம் வகுப்பு மாணவியிடம் திருமண ஆசைகாட்டி பாலியல் உறவு வைத்த இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த காரணத்தால், கைது செய்யப்பட்டு இருக்கின்றார். 

சென்னை புழல் அருகே கல்பாக்கம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரின் தாயார், மாவட்ட சமூக நல அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கின்றார். 

அந்த மனுவில், அவர்கள் வசித்து வரும் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், தன்னுடைய மகளை, திருமணம் செய்து கொள்வேன் என உறுதியளித்து அவருடன் பலமுறை பாலியல் உறவு வைத்துக்கொண்டுள்ளார். 

marriage, seithipunal

அதன் பின்னர் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை தட்டி கேட்டதற்காக, ஆபாசமாக திட்டி செல்போனில் மெசேஜ் ஒன்றை அனுப்பி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்மந்தப்பட்ட அந்த நபரான மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arrest in puzhal


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal