27 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போ ஏன் இப்படியா...? - சங்கீதா முடிவுக்கு இலங்கை எம்.பி. கடும் எதிர்ப்பு
Why this happening now after 27 years Sri Lankan MP strongly opposes Sangeetha decision
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்தச் சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் விஜய்யின் அரசியல் பயணத்தில் அவர் நேரடியாக எதிர்கொள்ளும் முதல் பெரிய தேர்தலாக பார்க்கப்படுகிறது. இப்படியான முக்கியமான நேரத்தில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருப்பது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தேர்தல் சூழல் தீவிரமாகி வரும் இந்த தருணத்தில் ஏன் இப்படியான மனு தாக்கல் செய்யப்பட்டது? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்து வருகிறது.இதற்கிடையில், இலங்கையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இந்த விவகாரம் குறித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், “27 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த ஒருவர் தனது வாழ்க்கையின் முக்கியமான உச்சநிலையில் நிற்கும் தருணத்தில் இப்படியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது.
நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று கூறுங்கள்; அந்த இடத்திற்கே வந்து மாலை அணிவித்து கோவில் கட்ட வேண்டும் போல தோன்றுகிறது.
இத்தகைய நிகழ்வுகளைப் பார்த்து ஒரு யாழ்ப்பாணத் தமிழனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் நான் மிகுந்த வேதனை அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, இந்த விவகாரத்தை மேலும் பேசுபொருளாக மாற்றி வருகின்றன.
English Summary
Why this happening now after 27 years Sri Lankan MP strongly opposes Sangeetha decision