ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் நீக்கம் - மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் தொழில் துறை அமைச்சராக உள்ளவர் பாா்த்தா சாட்டா்ஜி. இவர் இதற்கு முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக இவரை அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 23-ம் தேதி கைது செய்தனர். 

பாா்த்தா சாட்டா்ஜி தற்போது அமலாக்கத் துறையினரின் காவலில் இருக்கும் நிலையில், மேற்கு வங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தொழில் துறை, வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மின்னணுவியல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, தொழில் துறை புனரமைப்பு ஆகிய துறைகளிலிருந்தும் அவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சயின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவிக்கையில், "பார்த்தா சட்டர்ஜியை நீக்கி என்னுடைய கட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியில் பல திட்டங்கள் உள்ளன. ஆனால் நான் அதனைப் பற்றி கூற விரும்பவில்லை." என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WestBengal TMC Minister ParthaChatterjee


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->