தேர்தல் முடிந்ததும்... விட்டதை பிடிக்க தயாராகும் சசிகலா.. அதிர்ச்சியில் எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


வி கே சசிகலா அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவாள் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அவ்வப்போது அதிமுகவை தான் ஒன்றிணைக்கப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறார். 

சமீபத்தில் சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ள நமது எம்ஜிஆர் நாளேட்டில் அவர் வெளியிட்டிருந்த தலையங்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட போவதாக திருப்பித் தந்தார். 

மேலும் பதவிக்காக ஆசைப்பட்டு தாவியவர்கள் தங்கள் தவறை நிச்சயம் உணர்வார்கள் என குறிப்பிட்டு இருந்தார். இந்த தலையங்கம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் தற்போது அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த படிவத்தில் அதிமுக தொண்டரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வயது, ஆதார் எண், கல்வி தகுதி அதிமுகவில் இணைந்த ஆண்டு கட்சியில் வகித்த பதவி உள்ளிட்ட பல விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என சசிகலா அறிவுறுத்தியுள்ளார்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதிமுக தொண்டர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலா வசிக்கும் இல்லமான ஜெ ஜெயலலிதா இல்லம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம் எனவும் சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த இந்த சூழலில் அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் வி.கே சசிகலா இறங்கிவிட்டார்.

மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவு வெளியானதும் அதிமுக தொண்டர்கள் டிடிவி தினகரன் பின்னால் நிற்பார்கள் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வி.கே சசிகலாவும் களத்தில் இறங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வி கே சசிகலாவின் இந்த சைலன்ட் காய் நகர்த்தலால் அதிமுக தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இது பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vk Sasikala issue form for aiadmk cadres


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->