என்ன விளையாடுறாங்க? அமைச்சர் பொன்முடியை சுத்துப்போட்டு கேள்வி கேட்ட அதிமுக பெண் கவுன்சிலர்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம், வீரபாண்டி கிராமத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் கிராமசபை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி ஒவ்வொருத்தராக பேசுங்கள், எல்லாருடைய குறைகளும் கேட்கப்படும் என்று அமைச்சர் தெரிவிக்க,  அப்போது ஒரு பெண் எழுந்து, ஐயா ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். ஆனால் எனக்கும் இந்த ஊராட்சி நிர்வாகத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இல்லையா? என்று கேள்வி கேட்டார்.

அதற்கு அமைச்சர், "நீ வை மா. பிரச்சனையை சொல் என்றால், உனக்கும் ஊராட்சி தலைவருக்கும் உள்ள பிரச்சனையை சொல்லிக் கொண்டிருக்கிறாய். இருமா நீ. ஒன்றிய கவுன்சிலரா நீ. உங்கள் இரண்டு பேருக்கும் உள்ள பிரச்சனைகளை எல்லாம் தனியாக பேசிக் கொள்ளுங்கள். போதும் உட்காருமா" என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கு அந்த ஒன்றிய பெண் கவுன்சிலர், "நான் புகார் அளித்தால், நீ அதிமுக, உங்களுக்கு எந்த நிதியும் கொடுக்க முடியாது என்று புறக்கணிக்கிறார்கள்" என்க, அதற்கு அமைச்சர், "ஓ.., அப்படியா நீ. அதனால்தான் இப்படி பேசுகிறாய். விளையாடாத உக்காருமா" என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதற்க்கு பெண்கவுசிலர், என்ன விளையாடுறாங்க? என்று அமைச்சரை பார்த்து கேட்டார். பின்னர் அமைச்சர் அரசியல் கட்சி குறித்து எல்லாம் இந்த கூட்டத்தில் பேசக்கூடாது. பொதுவாக கிராமத்திற்கு என்ன தேவையோ அதை பேச வேண்டும். உங்களுக்கு கட்சி ஓட்டு போட்டவர்கள், ஓட்டு போடாதவர்கள் பற்றி எல்லாம் பேச வேண்டாம். உங்கள் ஊருக்கு என்ன வேண்டுமோ அதை பற்றி பேசுங்கள்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து ஒரு பெண்மணி குடிநீர் வரவில்லை என்று குறை கூற, அது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். மேலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாக ஒரு இளைஞர் தனது குறையை தெரிவிக்க, அமைச்சர் அது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துவருவதாக பதிலளித்தார்.

மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சரியாக பணி வழங்கவில்லை என்று ஒரு பெண்மணி தெரிவிக்க, அதற்கு பதில் அளித்த அமைச்சர், திட்டத்தில் உள்ளது படி வாரத்திற்கு நான்கு நாட்கள் உங்களுக்கு பணி வழங்கப்படும். எந்த குறையும் இருக்காது என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து உங்களுடைய மனுக்களை அதிகாரிகளிடம் நீங்கள் வழங்குங்கள். இந்த கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடத்துவார்கள். நன்றி வணக்கம்" என்று கூறி அமைச்சர் பொன்முடி புறப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vilupuram minister pumudy grama sabhai meet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->