#BREAKING || விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ காலமானார்.!! அதிர்ச்சியில் திமுகவினர்.!!
Vikkaravandi DMK MLA pugazhenthi passed away.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்து வரும் புகழேந்தி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதிக்கு உட்பட்ட அந்தியூர் திருவாதி பகுதியை சேர்ந்தவர். உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்மொழியின் தீவிர விசுவாசியான இவர் தனது 1973 ஆம் ஆண்டு முதல் திமுகவில் பொறுப்பு வகிதது வருகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது விக்கிரவாண்டி தொகுதியில் கலைஞரின் புகழேந்தி 9500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வாணர்.
இவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று ரத்த வாந்தி எடுத்ததால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
English Summary
Vikkaravandi DMK MLA pugazhenthi passed away.