#சற்றுமுன் ||  தமிழக அரசுக்கு விஜயகாந்த் வைத்த கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - அரசு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும் என்றும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

"ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - அரசு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது. 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 5,068 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான குறிப்பாணைகளைப் பிறப்பித்திருக்கிறது. 

இந்தக் குறிப்பாணைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற 42க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குரிய ஓய்வூதியப் பயன்களைப் பெற முடிாயமல் தவித்து வருகின்றனர்.  பணிக்காலம் முடிந்துவிட்டது என்றாலும் அவர்கள் அதிகாரபூர்வமாக இன்னும் பணி ஓய்வைப் பெற முடியவில்லை.


 
இதனால் அவர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே  5,068 பேர் மீதான நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.  மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்." என்று விஜயகாந்த தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth request to tn govt jan 12


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->