அமமுக - தேமுதிக கூட்டணியில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தலைமையில் ஒரு அணியும், அமமுக தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தற்போது தேமுதிக தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது எடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. 

 

இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் விஜய பிரபாகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, நாங்கள் யாரிடமும் கூட்டணி வேண்டும் என போய் நிற்கவில்லை. அமமுக கூட்டணியில் தேமுதிக இல்லை. தேமுதிக கூட்டணி தான் அமமுக இடம்பெற்றுள்ளது என கூறினார். இது அமமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijaya prebhakaran election campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->