#BREAKING : உத்தரகாண்ட் தேர்தல் :  பாஜக வேட்பாளரும், முதல்வருமான புஷ்கர் சிங் தாமி தோல்வி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதில், 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் பாஜக 47 இடங்களிலும் காங்கிரஸ் 19 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதனையடுத்து உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க அதிக  வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் காதிமா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், முதல்வருமான புஷ்கர் சிங் தாமியை, எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தாமி தோல்வி அடைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uthrakand chief minister pushkar Singh thami defeat


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->