நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருநங்கைகள்.. எந்தெந்த தொகுதிகளில் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் திருநங்கைகளை வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.  அந்த வகையில் அதிமுக சார்பில் தேனாம்பேட்டை மண்டலம் வார்டு எண் 122ல் திருநங்கை ஜெயதேவி, திமுக சார்பில் வேலூர் மாநகராட்சி 37 வது வார்டில் திருநங்கை கங்கா, பாஜக சார்பில் சென்னை மாநகராட்சி திரு.வி‌.க நகர் மண்டலத்தில் உள்ள 76 வது வார்டில் திருநங்கை ராஜம்மா ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருநங்கைகள் பலரும் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டிருப்பது தங்கள் சமூகத்திற்கு முன்னேற்றும் வகையில் உள்ளதாக நெகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Urban local election transgender candidates


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->