மீண்டும் மாநில அரசியலுக்கு வந்தது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விளக்கம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் (ஏப்ரல்-06)  வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. இந்த தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை திமுக அமைத்துள்ளது.  அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறார். அதன்படி, 169 இடங்களில் அதிமுக நேரடியாக களம் காணும் நிலையில், மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

எனினும் அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் சிலவற்றை மாற்றித் தரக்கோருவது மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மேலிடம் அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப்போய் வந்த சூழலில், நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், தமிழிசை சௌதரராஜன் மயிலாப்பூர் தொகுதியிலும், கோவை வடக்கில் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் அவிநாசியில் எல். முருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ள எல். முருகன் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதன்படி, இன்று, வானதி ஸ்ரீனிவாசனுடன் இணைந்து மத்திய இணையமச்சர் எல். முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் மீண்டும் மாநில அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து கூறியதாவது; இது என்னுடைய முடிவல்ல, கட்சியின் முடிவை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துவது தான் சாதாரண தொண்டனின் பணி. எங்கள் கூட்டணியின் ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது தான். மத்தியிலும், மாநிலத்திலும் என்.டி.ஏ (டபுள் என்ஜின் சர்கார்) கூட்டணியின் ஆட்சி அமைவதன் மூலமே, தமிழ்நாடு அடிப்படை கட்டமைப்பு உயரும். தமிழக மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

2026 தேர்தலில் அவிநாசி (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளராக 
போட்டியிடுவதன் மூலம் மீண்டும் மாநில அரசியலுக்கு எல். முருகன் வந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Minister of State L Murugan clarifies his return to state politics


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->