தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026; 100 இடங்களுக்கு மேல் தவெக முன்னிலை; மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆளும் திமுக ..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 04 முனைப் போட்டி நிலவியது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில், அதிமுக உள்ளது. ஆளும் கட்சியான திமுக 03-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

முதல் முறை தேர்தல் களத்தில் இறங்கிய நடிகர் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளார். 

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போதைய நிலவரத்தில், 234 தொகுதிகளுக்குமான முன்னிலை நிலவரங்கள் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி, தவெக 100 இடங்களிலும், அதிமுக கூட்டணி 80 இடங்களிலும், திமுக கூட்டணி 53 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Leads in Over 100 Seats


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->