MY TVK செயலியை அறிமுகப்படுத்தினார் தவெக தலைவர் விஜய்.!!
tvk leader vijay intro my tvk app
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள த.வெ.க. கட்சி சார்பாக 'மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர்' என்ற பெயரில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்தும் நோக்கில் "மை டிவிகே" என்று பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார்.

செயலியை தொடங்கி வைத்தப்பின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பரப்புரை முன்னெடுப்பையும் விஜய் இன்று தொடங்குகிறார். ஓரணியில் தமிழ்நாடு என்று திமுக உறுப்பினர் சேர்க்கை நடத்தும் நிலையில் தவெகவும் தற்போது அந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
English Summary
tvk leader vijay intro my tvk app