தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026; தமிழகம் முழுவதும் விசில் புரட்சி; திமுகவின் நட்சத்திர வேட்பாளர்கள் பின்னடைவு; தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தவெக..!
TVK Continues to Maintain the Lead
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி இன்று வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில், அதிமுக உள்ளது. ஆளும் கட்சியான திமுக 03-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முதல் முறை தேர்தல் களத்தில் இறங்கிய நடிகர் விஜய் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போதைய நிலவரத்தில், 234 தொகுதிகளுக்குமான முன்னிலை நிலவரங்களின் படி, தவெக 104 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.
அதாவது, முதல் முறை தேர்தலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். இந்த தேர்தலில் 05 கோடியே 73 லட்சத்து 43,291 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.
இதில் 04 கோடியே 87 லட்சத்து 98,833 பேர் வாக்களித்தனர். இது 85.10 சதவீதம் ஆகும்.
English Summary
TVK Continues to Maintain the Lead