ஸ்டாலின் அரசே... சமூகத்தை ஏமாற்ற நினைக்காதீங்க.. டிடிவி தினகரனின் பரபரப்பு அறிக்கை..!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழக அரசு பல்வேறு துறைகளில் உள்ள அரசு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பொங்கல் போனஸ் அறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் அவர்களும் பண்டிகை நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பொங்கல் போனஸ் மட்டுமின்றி திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது போல பகுதி நேர ஆசிரியர்களை திரு.ஸ்டாலின் அரசு பணி நியமனம் செய்ய வேண்டும். எத்தனையோ வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டதை போன்று இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆசிரியர் சமூகத்தை ஏமாற்ற நினைக்க வேண்டாம்" என தனது பதிவில் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Emphasis stalin govt give Pongal bonus to part time teachers


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->