மெகா கூட்டணிக்கு நான் ரெடி, நீங்க ரெடியா? - வெள்ளை கொடி ஏந்திய டிடிவி தினகரன், பச்சை கொடி காட்டுவாரா எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


மெகா கூட்டணி அமைத்து தான் திமுகவை வீழ்த்த முடியும். கூட்டணிக்கு நான் தயாராக உள்ளேன் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவித்தாவது, "சென்னையில் நம் கண்முன்னேயே  மழைநீர் வடிகால் வாய்க்களுக்கு குழிகள் தோண்டப்பட்டு கிடக்கிறது.

ஆனால், 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளதாக திமுக கூறி வருகின்றது. மக்களிடம் திமுகவினர் உண்மையைக் கூறி இருக்கலாம். மக்களை ஏமாற்றாமல் உங்களால் முடிந்த நல்லதை செய்யுங்கள். 

உங்களுக்கு ஆட்சி செய்ய மக்கள் அனுமதித்தால் தொடர்ந்து செய்யுங்கள். இல்லையா, வழி விட்டு செல்லுங்கள். இன்றைக்கு திமுக அரசு வரம்பு மீறி நடக்கிறது.

தவறான போக்கில் ஆட்சி செய்யும் திமுகவிற்கு, மூக்கணாங்கயிறு போல் ஆளுநர் தேவைதான். திமுக என்ற இந்த தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்றால், கூட்டணி அமைத்தால் தான் முடியும். 

திமுகவிற்கு எதிராக கூட்டணி, இல்லை சொல்கிறார்களே மெகா கூட்டணி (நேற்று எடப்பாடி பழனிசாமி அறிவித்த மெகா கூட்டணி) அமைத்தாலும் நாங்கள்  நேசகரம் நீட்டுவோம், கூட்டணி தலைமை குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say About Mega Alliance with ADMK AMMK


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->