தமிழர்களைக் கொன்றழித்த பாவத்திற்கு தி.மு.க சிறிதாவது பரிகாரம் தேடிக்கொள்ள வாய்ப்பு - டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான அங்குள்ள தமிழர்களின் நலன் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் சூழலில், நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான அங்குள்ள தமிழர்களின் நலன் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும்.

'இது வெளிநாட்டு விவகாரம்' என்று தட்டிக்கழித்துவிட நினைக்காமல், உறுதியான முடிவுகளை எடுத்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இலங்கைத் தமிழர்களைக் காத்திட தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திட வேண்டும். 

துன்பத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இப்போதாவது உதவுவதன்மூலம், காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றழித்த பாவத்திற்கு தி.மு.க சிறிதாவது பரிகாரம் தேடிக்கொள்ளலாம்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say about DMK Congress Eelma issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->