முதல்வர் பழனிசாமிக்கு புதிய பட்டம் வழங்கிய தினகரன்! திமுகவை ஆதரிப்பேன் ஆனால் ஆதரிக்கமாட்டேன்!   - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சற்றுமுன் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார்.  செய்தியாளர்களை சந்தித்த அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  புரட்சி பெருந்தகை என்ற பட்டத்தினை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். 

மேலும் திமுக மற்றும் அமமுக இடையே உள்ள உறவு குறித்து கேள்வி கேட்ட போது, இரண்டு கட்சிகளுக்கும் இடையே எவ்வித உறவும் இல்லை எனவும் தினகரன் விளக்கமளித்துள்ளார். மேலும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க   எதிர்க்கட்சிகள் முன்வந்தால் அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிச்சயமாக ஆதரிக்கும் எனவும், ஆனால் ஒருபோதும் திமுக ஆட்சி அமைக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு அளிக்காது எனவும் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். 

திமுகவுக்கும் அமமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, முதல்வர் சொல்வது போல அப்படி எதுவும் இல்லை எனவும், பணம் ஒருபோதும் தேர்தலில் வெற்றி தராது எனவும் தினகரன் கூறியுள்ளார். கமலஹாசனின் மதம் குறித்த சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி கேட்ட போது எந்த மதமும் தீவிரவாதத்தினை ஆதரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

English Summary

ttv dhinakaran press meet


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal