சாதி அவதூறு., காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.! மிரண்டு போன திருச்சி.!  - Seithipunal
Seithipunal


திருச்சியின் வடக்கு மாவட்ட திமுகவின் செயலாளராக காடுவெட்டி தியாகராஜன் இருக்கின்றார். சமீபத்தில் வைரலான ஆடியோ ஒன்றில் அவர் குறிப்பிட்ட சமூகம் குறித்தும், அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் குறித்தும், காவல்துறையினர் குறித்தும் அவதூறாக பேசும் விதமாக இருந்தது. 

இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காடுவெட்டி தியாகராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

அந்த வீடியோவில், வைரலாகும் ஆடியோவில் பேசியது தான் அல்ல என்றும், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக யாரோ தேவையில்லாத விஷம பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர். இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்து இருந்தார். மேலும், இந்த ஆடியோ குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். 

இந்த நிலையில், இன்று அதிமுகவினர் திருச்சியில் தியாகராஜனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மகளிர் அணியினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நிறைவேற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy protest against kaduvetti thiyagarajan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->