வெளியே போக சொன்ன கருணாநிதி... நினைவு கூர்ந்த துரைமுருகன்.. மேடையிலேயே தேம்பி அழுத டி.ஆர் பாலு..!! - Seithipunal
Seithipunal


திமுகவின் பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர் பாலு எழுதிய "பாதை மாறா பயணம்" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பல திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர். 

அப்பொழுது விழா மேடையில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது "டி ஆர் பாலு மனதில் பட்டதை படபடவென பேசி விடுவார். ஒருமுறை கலைஞர் கருணாநிதி ஏதோ ஒரு விஷயத்தை பேசும்பொழுது டி.ஆர் பாலு குறுக்கிட்டு சில கருத்துக்களை தெரிவித்தார். அப்போது நானும் உடன் இருந்தேன். உடனே கோபம் அடைந்த கலைஞர் கருணாநிதி "நீ தலைவனா..? நான் தலைவனா..? எது சரி என எனக்கே சொல்லித் தருகிறாயா? போடா.." என விரட்டினார். உடனே டி.ஆர் பாலு வெளியே சென்று விட்டார்.

சில நிமிடங்கள் யோசித்த கலைஞர் கருணாநிதி என்னை அழைத்து "ஏம்பா.. நல்லா யோசிச்சு பாத்துட்டேன். அவன் சொல்றது சரிதான்பா... அவனை கூப்பிடுவா" என கூறினார். நானும் டி.ஆர் பாலுவை சமாதானம் செய்து கலைஞரிடம் அழைத்து வந்தேன். அப்பொழுது டி.ஆர் பாலாவிடம் "பாலு.. நீ சொன்னது தான்பா சரி.. நான் தான் அவசரப்பட்டுட்டேன்.. என்ன மன்னிச்சிடு பாலு" என கருணாநிதியே மன்னிப்பு கேட்டார். அதை கேட்ட மேடையில் இருந்த டி.ஆர் பாலு அங்கேயே தேம்பி அழுதார். இதைக் கண்ட திமுக நிர்வாகிகளும் சோகத்தில் மூழ்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRBalu cried on stage as he remembered Karunanidhi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->