ஆன்லைன் கேமிங் ஒரு திறமையா.? ஆளுநரால் வெகுண்டெழுந்த டி.ஆர்.பாலு.!  - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி தடை செய்தல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் அவசர சட்டத்தின் காலக்கெடு முடிவடைந்தது. இந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். 

அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்ட சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழக ஆளுநர் இந்த சட்டத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 

அந்த கடிதத்திற்கும் தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து பதில் கடிதம் அனுப்பியது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 

இந்த நிலையில், இதுகுறித்து பேசியுள்ள டி.ஆர்.பாலு எம்.பி, " ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் ஆன்லைன் கேமிங் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்துள்ளார். இது போன்ற விளையாட்டை ஸ்கில் என்று ஆளுநர் கூறுவது ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TR Balu angry with Rn Ravi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->