பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றார். 

அதன்பிறகு அவர் ஆந்திராவில் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார். ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பதவியேற்று 3 வருடங்கள் நிறைவு பெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தயாராகும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை ஜெகன்மோகன் ரெட்டி எடுத்து வருகிறார். 

இதன் ஒரு பகுதியாக ஆந்திராவில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 13 புதிய மாவட்டங்களை ஏற்படுத்தப்பட்டன. மொத்தமாக 26 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது மாநில திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை பிரதமரும் வழங்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today jagan mohan reddy meet pm modi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->