#BigBreaking | மசோதாவை திரும்ப பெறுகிறோம் - ஜகா வாங்கிய தமிழக அரசு! - Seithipunal
Seithipunal



கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்ப பெறுவதாக கூறி, தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.

கூட்டுறவு சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைப்பது தாமதமாகி வரும் நிலையில், சட்டத்துறை அமைச்சகம் இந்த கடிதத்தை தற்போது எழுதி உள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்ட திருத்தம் கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் ஐந்தாண்டுகளில் இருந்து மூன்றாண்டுகளாக குறைக்கப்பட்டதாக்க அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தமிழக அரசுக்கு இந்த சட்ட மசோதா குறித்து பல்வேறு விளக்கங்களை கேட்டு கடிதம் எழுதி இருந்தார்.

அதில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறைதான் பின்பற்றப்பட்ட வருகிறது. ஐந்தாண்டுகள் தான் கூட்டுறவு சங்கங்களுடைய பதிவி காலமானது இருந்து வருகிறது. நீங்கள் ஏன் மூன்றாண்டுகளாக குறைத்தீர்கள் என்ற கேள்வியையும் ஆளுநர் அவர்கள் தமிழக அரசுக்கு முன் வைத்தார்.

இந்த நிலையில், தமிழக அரசு அதற்கு பதில் எதுவும் அளிக்காமல், சட்ட மசோதாவை நாங்கள் திரும்ப பெறுகிறோம் என்று, தமிழக சட்டத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.

இதன் மூலம் கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐந்தாண்டு காலம் நீடிப்பார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. அதே சமயத்தில் வருகின்ற ஜனவரி மாதம் கூட உள்ள தமிழக சட்டமன்றத்தில், இது குறித்து மேலும் ஒரு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Bill Return TN Governor 122022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->